பல்லடம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
பல்லடம் அருகே கோவில் விழாவில் பவளக்கொடி கும்மியாட்டம்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் காம்பிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கோவில் அருகே பள்ளி மாணவ -மாணவிகளின் நாடக நிகழ்ச்சி மற்றும் பவளக்கொடி கும்மியாட்டம் நடைபெற்றது.
அதில் 400-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கும்மியாட்டம் ஆடினர். கும்மியாட்டத்தின் நடுவில் பக்தி பாடல்கள் பாடப்பட்ட போது சிலர் அருள் வந்து ஆடினர். அதை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.