மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஹீஹான் ஹுசைனிஸ் இஷ்ன்றி -யூ- கராத்தே கழகம் சார்பாக 30 நிமிடங்களில் 6 வயது முதல் 12 வயது வரை உள்ள மழலைகள் 2222 முறை பிளாக் மற்றும் அட்டாக் முறையில் ஓடு உடைத்தல் சாதனை நிகழ்வு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஹீஹான் ஹுசைனிஸ் இஷ்ன்றி -யூ- கராத்தே கழகம் சார்பாக 49 ஆம் ஆண்டு முப்பெரும் விழா. தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கராத்தே பயிற்சி மாணவர்களின் சாதனை நிகழ்வாக 30 மாணவர்கள் 30 நிமிடங்களில் 2222 முறை பிளாக் மற்றும் அட்டாக் முறையில் ஓடு உடைத்தல் சாதனை நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக மறைந்த கராத்தே கலை நிபுணர் ஹுசைனியின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் தூவியும் மௌன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கராத்தே பயிற்சி பெற்ற ஆறு வயது முதல் 12 வயது வரையிலான மழலை மாணவர்கள் ஓடு உடைத்தல் சாதனை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
1111 முறை பிளாக் மற்றும் அட்டாக் முறையில் 1111 ஓடுகளை அடுத்தடுத்து உடைத்து சாதனை நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இறுதியில் சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது.மேலும் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வண்ண பெல்ட் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கி பாராட்டினர்.