தென்காசி,

தென்காசி மாவட்டம்- தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் சார்பில் பண்பொழி சையது குலாம் அம்பியா இல்ல வளாகத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அரி ரெங்கநாதன், தலைமை தாங்கினார்.முன்னாள் நகராட்சி சுகாதார ஆய்வாளர்அ. சையது குலாம் அம்பியா கே. சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அ.வேலுச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் எம்.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நிறுவன தின விழா உறுதிமொழிகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் காஷ்மீர் மாநிலம் பகல் காம்மில் சுற்றுலா சென்ற இந்தியா மற்றும் வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதியை கண்டித்தம் அவர்கள் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, பண்பொழி பெரியகுளம் கண்மாய் தூர்வாருதல் பணி, மதகு, நீர் வரத்துக் கால்வாய் சீரமைப்பு செய்தல், நாச்சியார்பத்து குளம் கண்மாய் தூர்வாருதல் பணி, மதகு, நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு செய்தல், அடவினை நைனார் அணை உள்பகுதி, ஆழப்படுத்தி, தூர்வாருதல்வேண்டுதல், பம்பை -அச்சன்கோவில் கீரியாறு -வைப்பாறு இணைப்பு கால்வாய் திட்டம் ,மத்திய அரசு 1991- 1995இல் சர்வே பணி செய்த திட்டம் செயல்படுத்த வேண்டும், தென்காசி மாவட்டம் ரெட்டை குளம் கால்வாய் ஊத்துமலை சுற்றுவட்டாரப் பகுதி இணைப்பு கால்வாய் திட்டம் தமிழக அரசு உடன் செயல்படுத்த வேண்டுதல், நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமற்ற, எடை குறை பாடற்ற நேர்மையான நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2005 ல் படி பணியாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்துதல் வகைக்கு தமிழக அரசு ஆவண செய்தல் வேண்டும், இயற்கை விவசாயம்செய்வோம்: இயற்கை உணவு படைப்போம், இயற்கை மருத்துவம் அறிந்து பயன்படுத்துவோம், தேசிய இறைச்சி பெருக்குத் திட்டம்என்.எல். எம். மூலம் கால்நடைகள் வளர்ப்புக்கு மானியத்துடன் வங்கிகள் மூலம் கடன் பெற்று விவசாயிகள் தொழில் முனைவோராக மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும், வேளாண்மை துறைகள் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு, சோலார் மின் திட்டம், சொட்டுநீர் பாசன முறை திட்டம், வேளாண் கருவிகள், டிராக்டர் மானியத்துடன் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் காடு வங்கிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆவன செய்ய வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால், நாட்டு பசு வளர்ப்பு அதன் பயன்கள் மற்றும் அது சார்ந்த மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு எம்.பெரியசாமி, இயற்கை விவசாயம் செய்தல் மற்றும் அதன் பயன்கள் டாக்டர் ஏ.எம். முருகன், மக்காச்சோளம் நெல் விவசாயம் மற்றும் விற்பனை சார்ந்த அனுபவம் தலைவர் சங்கரன்கோவில் ஒன்றியம் பொ.அய்யாதுரை, பண்ணை மகளிர் ஒருங்கிணைப்பு மாநில செயற்குழு உறுப்பினர் கன்னியாகுமரி எம்.ரோஸ்லி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயிகள் பங்கு வருவது காலத்தின் கட்டாயம் மாவட்ட தலைவர் கன்னியாகுமரி கே.இராஜேஷ் குமார், ஈத்தா மொழி லாபகரமான தென்னை விவசாயமாநில செயலாளர் கன்னியாகுமரி பி. முருகன், மாநில அமைப்பாளர் சென்னை சி.எஸ்.குமார் ஜி, திருவண்ணாமலை ஸ்ரீதர் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ச.சிவனையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முகம்மது உசேன், பண்பொழி சுற்று வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை தலைவர் சு. சுப்பிரமணிய தேவர்,நா.மாரியப்பன், பண்பொழி சுற்று வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு பேரவை பொருளாளர் முருகராஜ்,பூ.முகம்மது ஹனிபா, செய்யது மசூது கான்,எ.மாரியப்பன்,க.மீரா உசேன்,மு.ரமேஷ், செயற்குழு உறுப்பினர் மயில் சுப்பையா, தென்காசி மாவட்ட துணைத் தலைவர் கே. முருகேசன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் நன்றியுரை அரவிந்த் தென்காசி மாவட்ட பொருளாளர் அனைவரையும் வரவேற்று மதிய உணவளித்து சிறப்பித்தனர் இதில் கரிசல் குடியிருப்பு பண்பொழி தேன் பொத்தை கந்தசாமிபுரம் மீனாட்சிபுரம் ஆகிய ஊரிலிருந்து ஏராளமான விவசாயிகள் நிலக்கிழார்கள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட பொருளாளர் அரவிந்த் அனைவருக்கும் நன்றி கூறினார்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *