எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் சுவாமி கோவிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாதர் சுவாமி கோவில் உள்ளது.
நவகிரகங்களில் செவ்வாய் பகவான், தன்வந்திரி சித்தர், செல்வமுத்துக்குமாரசாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதியில் இருந்து சண்முகர் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டார்.
தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் உள்ளிட்ட 51 வகையான வாசனை திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை மனமுருக பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.