கச்சத் தீவைமீட்க்க மீனவரகள் சிந்திய ரத்தமும் போராட்டமும் வீண் போகக்கூடாது
கச்சதீவு மீட்க்க சோஷலிஸ்ட்டுகளின் போராட்ட வரலாறு 26-6-1974 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நமது கச்சத்தீவை இலங்கைக்கு தாரவார்த்த நாள் பாராளுமன்றத்தின் ஒப்புதல்இன்றி, தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி கச்சத்தீவை இழக்க செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்தவர் இந்திர காந்தி.
பாராளுமன்றத்தில் சோஷலிஸ்ட்டு கட்சி கவன ஈர்ப்பு பாராளுமன்றத்தில்
இந்திராகாந்தியின் செயலை கண்டித்து சோஷலிஸ்ட் M.P கள் மதுலிமயே,ராம் சேவக் யாதவ்,ரபிராய்,ஜார்ஜ் பெர்ன்ணாடஸ் மற்றும் இரா.செழியன் போன்றோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
வெளி நடப்பும் செய்தனர் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்ற சோஷலிஸ்ட்டுகட்சி
தமிழ்நாடு கிளை சோஷலிஸ்ட்டு கட்சிசட்டமன்ற உருப்பினர் ஈரோடு க.ரா.நல்லசிவம் அவர்கள் தலைமையில் கச்சத்தீவில் தேசிய கொடியை ஏற்ற சென்றபோது
200 க்கும்மேற்பட்ட சோஷலிஸ்ட்டுக்கள் கைது செய்து சிறைபடுத்தினர்
தமிழ்நாடு
இளைஞர் சோஷலிஸட்டுக்கள்ரத்த கையொப்பம்
எனதுதலைமையில் இயங்கிய இளைஞர் சோ.கட்சி மாநில முழுவதும் சேகரித்த தங்களின் ரத்த கையொப்பம் செய்த மக்களின் மனுவை கட்சியின் தேசிய தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
காஞ்சியில்
இந்திராகாந்திக்கு கருப்புகொடி
இந்திரா காந்தி சங்கராச்சாரியாரை சந்திக்க காஞ்சிக்கு
வருகை தந்த போது காஞ்சி நகரமன்ற சோஷலிஸ்ட் உருப்பினர், தொழிற்சங்க
தலைவர்கட்சி யின் மாவட்ட தலைவர் கே.வாசுதேவன் தலைமையில்
கருப்புகொடி காட்டியதில்,இரு கண்களும் பார்வையிழந்த மூத்த சோஷலிஸ்ட் தோழர் தா.ச.ராமைய்யா, ரிக்க்ஷா தொழிலாளர் சங்கதலைவர் சீதரன், தஞ்சை இளஞ்சிங்கம்
உட்பட பலர் கைதாகி சிறைசென்றார்கள் செங்கையில் இந்திரகாந்திக்கு
கருப்பு கொடி காஞ்சி நிகழ்ச்சி முடித்து சாலை வழியாக செங்கை பரனூர் மேம்பாலம்
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகைதந்த இந்திராகாந்திஎக்கு எனது தலைமையில்
இளைஞர் சோஷலிஸ்ட்டுகள் கருப்பு கொடி காட்டி சாலை மறியல்
செய்ததில் P.V. களத்தூர் ஊராட்சி தலைவர் பெ.ஆறுமுகம்,V.G.வாசுதேவன்.மா.க.ராஜேந்திரன்.ஆ.பச்சையப்பன்.
க அ.ராதா கிருஷ்ணன், ரஹீம் பாய் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறை தடி அடி அடக்கு முறையாலும் பாதிக்கப்பட்டோம்
ஒப்பந்தம் ரத்து செய்யவேண்டும். கச்சத்தீவு மீட்க படவேண்டும் தமிழ்நாடு
முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் எகமதாக தீர்மாணம் நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பட்டுள்ளது
உச்சநீதிமன்றத்திலும் வழக்காக வும் உள்ளது தினப் பொழுதும் மீனவர்கள் கைது, சிறை நடவடிக்கையை தொடர்கிறது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
கச்சதீவு மீட்பதே இதற்கு தீர்வு. இந்திராகாந்தி பாராளுமன்றத்தில் ஒப்புதலை
பெறாமல், பூகோல ரீதியாக காலந் தொட்டு இத் தீவின் மீன் பிடி தொழிலையும்
கடல் எல்லை யையும் ஆராயாமல் ,இப்பகுதிஅனுபவம் உள்ளவர்களின்
கருத்தைவைத்து கச்சதீவு ஒப்பந்தம் செய்யப்படவில்லை .
இந்த ஒப்பந்தம் ஒரு வலாற்று பிழை. இதனை ரத்து செய்து 70 லட்சம்
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கபட வேண்டியது அரசுகளின்
கடமை. அன்று மே.வங்க முதல்வராக இருந்த Dr.வி.சி.ராய் இந்தியாவிற்குசொந்தமான
சில தீவுகளை பங்காள தேஷ்க்கு அளித்ததைசட்ட போராட்டத்தின் மூலம் மீட்ட வரலாறும் உள்ளது.
மீனவர்கள்
சிந்தி வரும் ரத்தமும் போராட்டங்களும் வீணாக கூடாது இதுவே எங்களின்
வேண்டுகோல்
துரை.பிருதிவிராஜ்
Ex.மாநில பொது
செயலாளர்,
ஐக்கிய ஜனதா தளம்.
ஒருங்கிணைப்பாளர்,
டாக்டர் லோகியா சோஷலிஸ்ட் சிந்தனையாளர் மன்றம்,
தமிழ்நாடு.
960068519