மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தலைவர், மாவட்ட முதன்மை நீதிபதி மாண்புமிகு.முத்துசாராதா மரக்கன்றுகளை நட்டு வைத்து நாம் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் மரங்களை அழித்துவிட்டு வீடுகளை கட்டி வருகிறோம்,. நம் தலைமுறையினருக்கு எதனை கொடுக்கிறோம், மகனுக்கும் மகளுக்கு வீடுகளை கட்ட வேண்டும், வங்கிகளில் வைப்புத்தொகை செய்ய வேண்டு மென நினைக்கிறாம் என்று கூறி வரும் காலங்களில் உயர்நீதிமன்ற உத்தரவு படி 1000 மரக்கன்றுகளை நெடுஞ்சாலைகளில் நட திட்டமிள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்சோ நீதிபதி.வேல்முருகன், குடும்ப நீதிமன்ற நீதிபதி.விஜயகுமார், மகிளா நீதிபதி.சரண், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்.கனகராஜ், முதன்மை சார்பு நீதிபதி.தீபா, கூடுதல் சார்பு நீதிபதி.கோகுலகிருஷ்ணன்,செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு.திரிவேணி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி.ரெங்கராஜ், குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண்1.சௌமியா மேத்யூ உள்ளிட்ட ஏனைய நீதிபதிகள் மற்றும் திரு.கந்தசாமி, உதவி திட்ட அலுவலர்,ரமேஷ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு சுமார் 50 மரக்கன்றுகளை மரக்கன்றுகளை நட்டனர்.