சத்தியமங்கலம்
தாளவாடி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
தாளவாடி, திகனாரை, ஏரகனஹள்ளி, பணக்கஹள்ளி, கெட்டவாடி, அருளவாடி, பாரதிபுரம், ராமாபுரம், சிக்கள்ளி, நெய்தாளபுரம், தலமலை, ஆசனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் தக்காளியை வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனா்.
கடந்தாண்டு தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையானது. அதே போல, இந்தாண்டும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையாகும் என ஏராளமான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்தனா்.
இந்நிலையில், வெளி மாநில தக்காளி வரத்தாலும், உள்ளூரில் விளைச்சல் அதிகரிப்பாலும் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.5-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் தாளவாடி பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.