தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் கண்ணன் நகரில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு தெற்கு மாவட்ட தலைவர் மோகன பிரியா சரவணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பியும் மாநில செய்தி தொடர்பாளருமான எஸ்.கே கார்வேந்தன், முன்னாள் மாநில செயலாளர் நந்தகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் ரங்கநாயகி விவேக் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் இதில் மாநில கூட்டுறவு செயலாளர் சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர தலைவர் குமார் நன்றி கூறினார்.
ஹாய் தொடர்ந்து தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் துவக்க விழா நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் மற்றும் மாவட்ட செயலாளர் மோகனப்பிரியா ஆகியோர் பேசினர். அதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.