தேனி மாவட்டம் போடியில் ஆன்மீக பக்தர்களால் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபரமசிவன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில் அனைத்து செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவரும் பெஸ்ட் மணி கோல்ட் அதிபருமான பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டியும் சிறப்பு கும்ப மரியாதை அளித்தும் சிறப்பான வரவேற்பு கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது
இதனை பரிவுடன் ஏற்றுக் கொண்ட நிறுவனத் தலைவர் அவர்கள் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார் உடன் பேரவையின் சிங்கப்பூர் நாட்டின் தலைவர் பரமசிவம் உயர்மட்ட ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாஅழகண்ணன் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் பாண்டி முனி மாநில செயற்குழு உறுப்பினர் திரு.பெத்தண்ணன் தேனி மாவட்ட செயலாளர் போடி அழகர்சாமி பேரவையின் மாநில அமைப்புச் செயலாளர் பரணி பேரவையின் நிர்வாகி குரோம்பேட்டை சீனிவாசன் மற்றும் பேரவையின் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.