கோவை இன்னர்வீல் கிளப் மாவட்டம் 320, சமுதாய சேவை, திறன்மேம்பாடு மற்றும் சமுதாய மாற்றங்களுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கோவை இன்னர்வீல் கிளப், கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மாநகராட்சி பொது அறிவு மற்றும் நகர மைய நுாலகங்களுக்கு 500 புத்தகங்களை இன்று வழங்கியுள்ளது. இவ்வமைப்பு ஏற்கனவே 3500 புத்தகங்களை வழங்கியுள்ளது. இவை, மத்திய போட்டி தேர்வு அளவிலான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகும். மேலும் இன்னர் வீல் அமைப்பு 15 கணிணிகளையும் வழங்கியுள்ளது.
இந்த முயற்சிக்கு கோவை இன்னர்வீல் கிளப் உறுப்பினர்கள் மட்டுமின்றி, குஜராத்தி ஜெயின் சமாஜ், குஜராத்தி கேடியா பவன் ஆகியவையும் இணைந்து ஆதரவு வழங்கியுள்ளன.
இந்த நிகழ்ச்சி கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமரன், மாவட்டம் தலைவர் ஜக்ருதி அஸ்வின் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதுவரை இந்த புத்தகங்களால் 37000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். 16 மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று வண்ணமயமாக ஜொலிக்கின்றனர்.