மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வைகை தென்கரை பகுதியில் செயல் பட்டு வரும் அரிசி ஆலையில் இருந்து கழிவுகளை ஆற்றில் கொட்டியதாக வைகைநதி மக்கள் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படை யில் நகர் நல அலுவலர் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் அப்பகுதியினை ஆய்வு செய்து கழிவுகளை வைகை ஆற்றினுள் கொட்டிய அரிசி ஆலை நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம் விதித்தனர்.
மேலும் அப்பகுதி யில் இருந்த வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் கழிவுகளை ஆற்றில் போடக் கூடாது என மாநகராட்சி பரப்புரையாளர்கள் மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.