துறையூர் ஏப்-05
திருச்சி மாவட்டம் துறையூரில் கிளாசிக் பர்னிச்சர் கோ திறப்பு விழா நடைபெற்றது.துறையூர் திருச்சி ரோட்டில் கரூர் வைசியா (கேவிபி) வங்கி அருகில் ஏப்ரல் 04 ந் தேதி புதிய கிளாசிக் பர்னிச்சர் கோ திறப்பு விழா நடைபெற்றது.
திறப்பு விழாவில் உரிமையாளர் பி. வி.பிரேம் தீப் அனைவரையும் வரவேற்றார்.ஷோரூமை புனிதவள்ளி செல்வநாயகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முதல் விற்பனையை வழக்கறிஞர் செல்வ நாயகம் தொடங்கி வைத்தார்.திறப்பு விழா சலுகையாக 04/04/2025 முதல் 14/04/2025 வரை குறிப்பிட்ட சில பர்னிச்சர் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று நிர்வாகி தெரிவித்துள்ளார்.விழாவில் லிட்டில் ஆனந்த் மெடிக்கல் மணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டுள்ள கிளாசிக் பர்னிச்சர் கோ துறையூரில் தனது புதிய கிளையை தொடங்கியுள்ளது.
இங்கு வாங்கும் பர்னிச்சர் பொருட்கள் ஃப்ரீ டெலிவரி தரப்படும்.டவுன் பேமென்ட் முன்பணம் இல்லாமல் இஎம்ஐ வசதியுடன் பொருட்கள் தரப்படும். சொந்த தயாரிப்பில் தயாரான சோபா,மர கட்டில்,மர பீரோ,ஸ்பிரிங் மெத்தை, டேபிள், டைனிங் டேபிள், டிரஸிங் டேபிள் உள்ளிட்ட தரமான பர்னிச்சர் பொருட்கள் குறைந்த விலைக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் ,காம்போ ஆஃபரிலும் பர்னிச்சர் பொருட்கள் வழங்கப்படும் என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்