அரியலூர் அண்ணா சிலை அருகே, வக்ஃப் வாரிய திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். அரியலூர் நகரச் செயலாளர் எம். எஸ். கே .கார்த்திக்,மாவட்ட இணை செயலாளர் விஜய்சேகர், மாவட்ட துணை செயலாளர் RS பாலமுருகன்
மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் ராஜேஷ்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் நர்மதா பாலு,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் க .முரளி, மு.ஹக்கீம், திருமுருகன், மோகன்தாஸ், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
