வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஜெ.முகமது ரஃபி நன்றி தெரிவித்துள்ளார்..
பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஒரு முறை தாம் அனைவருக்குமான முதல்வர் என நிரூபித்து உள்ளதாகவும்,
திட்டமிட்டு ஒன்றிய அரசாங்கம் செய்யும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுக்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்..
இஸ்லாமியர்களின் பாதுகாப்பு அரணாக இந்த தீர்மானம் அமையும் அடிப்படையில், மதநல்லிணக்கம் தழைத்தோங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்கு, பல்சமய நல்லுறவு இயக்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
குறிப்பாக ,சமத்துவம், சகோதரத்துவம், மதநல்லிணக்கம் தழைத்தோங்கும் வகையில் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், பல்சமய நல்லுறவு இயக்கம் ஆதரவு தந்து உடன் பயணித்து இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து இந்தியர்களின் உரிமைகளையும் மீட்கும். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் சதி திட்டங்களை முறியடிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு என்றும் பல்சமய நல்லுறவு இயக்கம் ஆதரவாக களப்பணியாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் என தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்…