தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், மே- 16. தஞ்சாவூர் கரந்தை பேருந்து நிலையம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வேலை நிறுத்த விளக்க பிரச்சார பிரச்சார இயக்கம் தொடங்கியது.
ஒன்றிய மோடி அரசின் மக்கள்விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 ல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை ஏற்று தஞ்சை மாநகரில் செயல்படும் அனைத்து ஆட்டோ சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை மூன்று இடங்களில் வேலை நிறுத்த விளக்க பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
நேற்று மாலை 5 மணிக்கு கரந்தை பேருந்து நிலையம் அருகில் பிரச்சார இயக்கம் தொடங்கியது. இந்த இயக்கத்திற்கு ஆட்டோ சங்க நிர்வாகிகள் தொமுச சிவா, ஏஐடியுசி செந்தில்நாதன், சிஐடியு முஸ்தபா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி லெட்சுமணன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர் ஆகியோர் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.
கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட பொருளாளர் பேர்நீதிஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தொமுச நிர்வாகிகள் பாஸ்டின், கலியமூர்த்தி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், நிர்வாகி எஸ்.பாலகிருஷ்ணன், ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கே.ராஜன், நிர்வாகி ரமேஷ், எச்எம்எஸ் நிர்வாகிகள் எம்.ராஜா, மறியல் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள். பிரச்சார இயக்கத்தில் தொழிலாளர் விரோத சட்டங்கள் திரும்ப பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்ற புதிய மோட்டார் வாகன சட்டம், புதிய மின்சார சட்டம் திரும்ப பெற வேண்டும், இயற்கை வளங்கள், கனிம வளங்கள் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பிரச்சார இயக்கத்தில் அனைத்து சங்க நிர்வாகிகள் ஜான்சன், செல்வம், திலீப் குமார் சபாமணி, கலியமூர்த்தி, ராமச்சந்திரன், ஜான்சன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.