திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் தற்போது திருப்திகரமாக உள்ள நிலையில் வருகின்ற ஜுன் மாதம் 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனை அடுத்து குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வலங்கைமான் தாலுக்காவில் நடப்பாண்டில் 8000 ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் முன்பட்ட குறுவையாக 2000 ஏக்கர் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

குறுவை மற்றும் சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கைநடவு, இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் முன்பட்ட குறுவைப் பணிகளில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக இயந்திரம் நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நேரடி விதைப்பு மூலம் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பும், இயந்திரம் நடவு மூலம் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பும், வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் சாகுபடி மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மின் மோட்டார்கள் மூலம் விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை துவங்கி ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளிகள் வேளாண்மை பணிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வலங்கைமான் பகுதியில் உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் முதன்முதலாக வடமாநில தொழிலாளிகள் வேளாண்மை பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட நிலையில் தற்போது வலங்கைமான் பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலுமே வடமாநில தொழிலாளிகள் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயந்திர நடவுக்கு நிகராக நடவு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளிகள் நமது பகுதிகளில் வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவாக இருப்பதாலும், ஆட்கள் பற்றாக்குறை தவிர்க்கும் வகையிலும், வடமாநில தொழிலாளிகளை விவசாயிகள் ஈடுபடுத்தி வருகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,700 என்ற சொற்பத் தொகையில் நடவு பணிகளில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சிறுசிறு குழுக்களாக பிரிந்து நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சாகுபடி பணிகளில் வடமாநில தொழிலாளிகள் வருகையால் மேலும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வலங்கைமான் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் முட்பட்ட குறுவை வடமாநில இயந்திர தொழிலாளிகளைக் கொண்டு முன்பட்ட குறுவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *