வால்பாறை – உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுவிழா, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா வட்டாரக்கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் சத்தியவாணி முத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை நடைபெற்றது
இவ்விழாவில் கணித ஆசிரியர் வசந்தகுமார் அனைவரையும் வரவேற்ற நிலையில் தலைமை ஆசிரியை பொய்லாள் பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தார் இவ்விழாவில் மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர் பின்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
சிறப்பாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியை தீபிகா ஆகியோர் செய்திருந்த நிலையில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்களும் பெற்றோர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருக்கு ஆசிரியர்கள் சார்பாக சிறப்பு பரிசும், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நினைவு பரிசும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் விழா முடிவில் ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்