2026 சட்டமன்றதேர்தல் திமுக ஆலோசனைகூட்டம் திமுகதலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரத்தில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும்சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார் மேலும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பேரூர் கழகச் செயலாளர்கள், பொதுக்குழு- செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பேசும்போது திராவிடமாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, எதிரிகளின் அவதூறுகளை முறியடிப்பதற்கான திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட கழக ஆக்கப்பணிகள் குறித்து விரிவாக எடுத்துறைத்து பேசினார்