கோவை நைட்டிங்கேல் கல்வி குழுமங்கள் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழா
உலக பொருளாதாரத்தில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஓய்வு பெற்ற இந்திய இராணுவ செவிலியர் பிரிவு பெண் அதிகாரி கருத்து
மருத்துவ துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்துவத்தை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள நைட்டிங்கேல் கல்வி குழுமம் சார்பாக நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழாவில்,செவிலியர் பணியில் நவீன முறைகளை கொண்டு வந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலை கவுரவிக்கும் விதமாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது…
நைட்டிங்கேல் கல்வி குழுமங்களின் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக இந்திய இராணுவத்தில் ஓய்வு பெற்ற செவியர் துறை பெண் அதிகாரியான இக்னசியஸ் டெலோஸ் ப்ளோரா கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே உரையாடினார்..
அப்போது பேசிய அவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் பங்கு எப்படி முக்கியமோ. அதே போல செவிலியர்களின் சேவையும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்தார் செவிலியர் துறை சார்ந்த பணிகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர்,மருத்துவ துறையில் வரும் நவீன தொழில் நுட்பங்களை செவிலியர்கள் தொடர்ந்து கற்று கொள்வது அவசியம் என தெரிவித்தார்..
நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் செவிலியர்கள் அதிகம் தேவைப்படுவதாக கூறிய அவர்,அதே நேரத்தில் உள் நாட்டில் பணிச்சுமை,சம்பள குறைவு பொன்ற காரணங்களால், செவிலியர்கள் வெளிநாடுகளில் சென்று பணியாற்ற ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்..
இதனை உள்நாட்டு மருத்துவதுறையினர் கவனத்தில் எடுத்து உள்நாட்டு செவிலியர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கக விடுத்தார் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், நைட்டிங்கேல் கல்வி குழுமத்தை சேர்ந்த முதல்வர்கள்,துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,ஊழியர்கள் உட்பட அனைவரும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
இந்நிகழ்ச்சியில் நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் செயலர்கள் ராஜீவ், சஞ்சய் மற்றும் கல்லூரியின் முதல்வர்கள் முனைவர் சோபியா ஜூலியட், ராஜன், மும்தாஜ், இந்து லதா, பொன்னம்மாள், அன்னம், மற்றும் துணை முதல்வர்கள் துர்கா முகில் சிங் திலகவதி உட்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்