தெள்ளார் இராஜா நந்திவர்மன் கல்லூரியில் மகளிர் நாள் விழா கல்லூரி தலைவர் முனைவர் வி.முத்து விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் எட்டயபுரம் ஜெ.செல்வ முத்துமாரி சிறப்புரை….
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரித் தலைவர் கலைமாமணி, முனைவர் வி. முத்து அவர்கள் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் எட்டயபுரம் ஆய்வாளர் செல்வ முத்துமாரி அவர்கள் கலந்து கொண்டு பெண்களின் இன்றைய நிலைகுறித்தும் எதிர்காலத்தில் மாணவிகள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக இயக்குநர் பா. போஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் எஸ். பழனிச்சாமி அவர்களும், முதல்வர் முனைவர் இரா. ஏழுமலை அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக உயிர்வேதியியல் துறைத்தலைவர் முனைவர் மரகதவள்ளி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக வேதியியல் துறைத்தலைவர் தமிழ்ச்செல்வி அவர்கள் நன்றி உரையாற்றினார்
இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர்கள் அப்பாண்டைராஜன், ஆனந்தன், இராதா, மணி, சங்கரன், துணை முதல்வர் முனைவர் இராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.