உழவர்கரை பிச்சவீரன்பேட்டில் மாநில கபடி போட்டி
அமமுக இணை செயலாளர் முனைவர் வி. லாவண்யா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்…
புதுச்சேரி உழவர்கரை சட்டமன்ற தொகுதி பிச்சவீரன்பேட்டில் யுனைடெட் அமைப்பின் தலைவர் தெய்வசிகாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான ஆடவர், பெண்கள் கபடிப்போட்டி நடைபெற்றது.
இதில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு ஆடவர் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.
இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமமுக மேற்கு மாநில இணை செயலாளர் முனைவர்.வி லாவண்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டி நடத்துவதற்கு ரூ.15 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.
மேலும் நியூ வேல்டு அணி வீரர்கள் 13 பேருக்கு விளையாட்டு சீருடையும் வழங்கி, வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமமுக கழக அமைப்பு செயலாளர்
யூ.சி. ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ.,
கிழக்கு மாநில செயலாளர் முருகன், அம்மா பேரவை செயலாளர் பிரகாஷ், மேற்கு மாநில வர்த்தக பிரிவு செயலாளர் தனவேலு, பிச்சவீரன்பேட் முருகன், செல்வமணி, ஐயப்பன், வேலு, குமார், அன்பழகன், முத்துப்பிள்ளை பாளையத்தை சார்ந்த பிரசாத், ராஜி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.