கந்தர்வகோட்டை மார்ச் 23.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச வானிலை தினத்தை முன்னிட்டு அறிவியல் நாட்காட்டி வெளியிடப்பட்டது
நாட்காட்டியினை தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி வெளியிட்டார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது உலக வானிலை ஆய்வு அமைப்பு 1950 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று நிறுவப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று உலக வானிலை ஆய்வு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நமது அன்றாட வாழ்வில் வானிலை, காலநிலை மற்றும் நீரின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் தேசிய வானிலை மற்றும் நீர்நிலை சேவைகளின் பணியை இது எடுத்துக்காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டு உலக வானிலை தினத்திற்கான கருப்பொருள் முன்கூட்டிய எச்சரிக்கை இடைவெளியை ஒன்றாக மூடுதல் என்பதாகும்.
உலக வானிலையியல் அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் இயங்கி வருகிறது. இந்திய வானிலைத் துறையின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது; சென்னை, மும்பை, கல்கத்தா, நாக்பூர், குவஹாத்தி , டெல்லி போன்றவற்றில் பிராந்திய சேவை அமைப்புகள் இயங்கி வருகின்றன என்று பேசினார். இந்நிகழ்வில் வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி கலந்து கொண்டார். நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா ந்தியா நன்றி கூறினார்.