தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் அதிமுக சார்பில் துண்டறிக்கை பிரச்சாரம் வழங்கப்பட்டது.
இதில் 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக சுமார் 525-க்கு மேற்பட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்து இன்றைக்கும் சுமார் 20 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத நிலையில் பொம்மை முதலமைச்சர் ஆக ஸ்டாலின் உள்ளார் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசி வருகின்றார் என்று துண்டு பிரச்சுரம் மக்களுக்கு வழங்கப்பட்டது
இதில் தேனி மாவட்ட அதிமுக ஒன்றியசெயலாளர் அன்னபிரகாஷ்,மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைதலைவர் ஏ எஸ்ஆர் பாலச்சந்தர், மாவட்ட கழக இணைச்செயலாளர் முத்துலட்சுமி,,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெயக்குமார்,வடுகபட்டி பேரூர் கிளைச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.