மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 8ம் தேதி திருக்கல்யாணம், மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மதுரையில் உலக பிர சித்தி பெற்ற மீனாட்சி அம் மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக் குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் வலம் வருவர். மே 6ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மே 7ம்தேதி திக்கு விஜயம் நடை பெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ம் தேதி நடக்கி றது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக் கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். அன்றிரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
மே 8ல் திருக்கல்யாணம்; மே9ல் தேரோட்டம்,மே 12ல் வைகையாற்றில் இறங்குகிறார் அழகர்.அதனை தொடர்ந்து மே 10ம் தேதி தீர்த்த வாரியுடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவிற்காக மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார்கள், அறங்காவலர்கள் மற்றும் இணை மற்றும் துணை ஆணையர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.