யோகாவில் உச்ச கலையான சூப்பர் பிரெய்ன் யோகாவை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனைக்கு நலம் யோகா மையத்தில் பயிற்சி எடுத்து வரும் கோவை சிறுவர்கள்
இந்தியாவின் பெருமைகளை கூறும் கலைகளில் ஒன்றான யோக கலை தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது..
யோகா ஆசனங்கள் மூலம் உடலின் வலிமை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியையும், நிம்மதியையும் தருவதில் யோகா கலை முக்கிய பங்கு வகிக்கிறது..
இந்நிலையில் கோவையை சேர்ந்த நலம் யோகா மையத்தில் அதன் நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராஜேஷ் குமார், சிறு வயதினர்க்கு பிரத்யேக யோகா பயிற்சியை அளித்து சூப்பர் பிரெய்ன் ஆற்றலை பெற வைத்துள்ளார்…
நான்கு வயது முதலானவர்கள் துவங்கி 14 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளுக்கு வழங்கப்படும் பிரத்யேக யோகா பயிற்சியால், கண்களை கட்டி கொண்டு பொருட்கள் வண்ணங்களை அச்சு பிசகாமல் அடையாளம் கூறும் ஆற்றலை பெறுகின்றனர்..
அது மட்டுமின்றி வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியத்தை பார்க்காமல் கண்களை கட்டியபடி அதே போல ,ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி அசத்துவது, எண் அட்டைகளை சரியாக அடுக்குவது என கண்களை கட்டி கொண்டு சிறுவர் சிறுமிகள் செய்வது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது..
இதில் பயிற்சி பெற்று வரும் சித்தார்த்,சர்வின் மற்றும் சாதனா ஆகியோர் கின்னஸ் சாதனை பெறும் முயற்சியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..
இது குறித்து பயிற்சியாளர் ராஜேஷ் கூறுகையி்ல்,சூப்பர் பிரெய்ன் யோகாவை சிறுவர்,சிறுமிகளால் மட்டுமே செய்ய முடியும் எனவும்,இதனால் மூளை அதிக ஆற்றல் பெறுவதோடு கண்களை கட்டி கொண்டு எதையுமே இவர்களால் அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்தார்..
கின்னஸ் உலக சாதனைக்காக தற்போது பயிற்சி வழங்கி வருவதாக தெரிவித்த அவர்,சூப்பர் பிரெய்ன் யோகாவை பயிற்சி எடுப்பதால் விளையாட்டு, கல்வி போன்றவைகளில் மாணவர்கள் அதிகம் சாதிக்க முடியும் என தெரிவித்தார்…