கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் ஆல்பிரட் நோபல் பிறந்த தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் ஏற்ற கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா குறித்து பேசும்பொழுது
உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க விஞ்ஞானிகளில் ஒருவராக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்ச் 14, 1879 அன்று ஜெர்மனியில் பிறந்தார். அவரது பல தொழில்முறை சாதனைகளில், நோபல் பரிசு வென்றவர், பொது சார்பியல் கோட்பாட்டை உருவாக்கியதற்காக மிகவும் பிரபலமானவர். ஐன்ஸ்டீன் தனது படைப்புகளால் நவீன இயற்பியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். நமது பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு அவர் பல கதவுகளைத் திறந்தார்.
1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் மட்டுமல்ல அறிவியல் உலகுக்கே அதிசயங்களை வழங்கிய ஆண்டு. ஒளிமின் விளைவு, பிரெளனியன் இயக்கம், சிறப்பு சார்புகோட்பாடு E=mc2 போன்றவை அறிவியல் உலகையே அதிர வைத்தன. தொடர்ந்து பல கோட்பாடுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வந்த ஐன்ஸ்டீனுக்கு உலகப்புகழ் கிடைத்தது. ஐன்ஸ்டீன் குவான்டம் எந்திரவியல், புள்ளியியல் எந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
இயற்பியலில் அவர் செய்த சேவைக்காக 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது கண்டுப்பிடிப்புகள் மனிதன் அறிவியலின் புதிய பரிணாமங்களுக்கு செல்ல வழிவகுத்தது.
இவரின் நினைவாக 2005 ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டாக கொண்டாடினர். அதற்கு காரணம் இவர் 1905ல் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைகளின் நூற்றாண்டை நினைவுப்படுத்தும் பொருட்டு ஆகும். 1921 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
இவரை மறப்பினும் இவரது சூத்திரத்தை நம்மவர்கள் மறக்கமாட்டார்கள். அதுதான் E = mc2என்கிற சூத்திரம்.
அறிவியல் மட்டுமல்லாமல், அரசியல், சமூகம், தத்துவம், சேவை என பல துறைகளில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியவர் ஐன்ஸ்டீன். வாழ்நாள் முழுவதும், அறிவியல் மனிதகுல மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படவேண்டும் என்று விரும்பினார். ஆயுதத்தின் மூலமாக அமைதியை ஏற்படுத்த முடியாது, புரிதல் மட்டுமே அமைதிக்கான நிரந்தர வழி என்றும் வலியுறுத்தினார். ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, அவர் ஒரு மனிதாபிமானமிக்க நல்ல மனிதரும் ஆவார்.
மாணவர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு குறித்து அறிந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.