புதுச்சேரியில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களோடு ஒன்றாக தானும் அமர்ந்து உணவு உண்டார்.
முதல்வர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, விலியன் ரிச்சர்ட்ஸ், ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.