Advertisement

வில்லியனூரில் 30 ஆதிதிராவிடர்களுக்கு நிதியுதவி -எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வில்லியனூர் தொகுதியை சேர்ந்த கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 30 நபர்களுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் தொகையை 18,000 ஆயிரம் மற்றும் 13,000 வீதம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான ஆணையை வில்லியனூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில எதிர்க்கட்சி தலைவருமான இரா. சிவா அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், அவைத் தலைவர் ஜலால் அணிப், தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் அணி துணை தலைவர் கதிரவன்,தொகுதி துணை செயலாளர்கள் அரிகிருஷ்ணன், ஜெகன்மோகன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் சபரி, ராஜி, மிலிட்டரி முருகன், சேகர், வீரக்கண்ணு, முருகன், கார்த்திகேயன், மனோகர், ராமஜெயம், ரகு, ராஜன், காளிதாஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *