புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் சுனாமி குடியிருப்பு மின் அலுவலகம் எதிரே உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஜி.சி.சந்திரன் கலந்து கொண்டு மகளிருக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு ,பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த மீனவ மகளிர் பரமேஸ்வரி என்பவர் கடந்த ஆண்டு ரோட்டில் கிடந்த ஐபோன் மற்றும் ரூ 1400 ரொக்கம் உள்ள மணி பர்ஸ் கொண்டு வந்து சங்கத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் நேர்மையை உலக மகளிர் தினத்தில் பாராட்டி மக்கள் நலச் சங்கத்தின் சுழல் கோப்பையை நேர்மையாளர் விருதாக வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சங்க செயல் தலைவர் பா. ஆறுமுகம், தலைவர் ஆ. குமார், செயலாளர் ஊ. உத்திராடம், மீனவ சமூகப் பற்றாளர் ரவிக்குமார் , மகளிர் அணி தலைவி மணிமேகலை, சிவகாமி சங்க நிர்வாகிகள் பிரகாஷ், ஆனந்து, பலராமன், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.