உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம், புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பரிசோதனை முகாம், கடற்கரை சாலை, காந்தி திடலில் தொடங்கியது. மாண்புமிகு துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆலோசகர் மணி, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன், இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி தலைவர் டாக்டர் சுதாகர், ஜோதி கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். உலக கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை முகாம் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறும்.