செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் வில்லியனூர் வட்டார அளவிலான மகளிர் கூட்டமைப்பின் பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
இதில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா மகளிர் சட்ட ஆலோசகர் சபிதா பாலின நிபுணர் சந்தான லட்சுமி வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி அனைவரும் கலந்து கொண்டனர்
மகளிர் கூட்டமைப்பை சார்ந்த சமூக மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் பாலின தோழிகள் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் இதில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்