சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் புதுச்சேரி நகராட்சிக்கு ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் கோரிக்கை
ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாபு, கார்த்திகேயன், தயாளன் ஆகியோர் தலைமை வகித்தார்கள். இப்பேரவை கூட்டத்தில் அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், அந்தோணி, துரைசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர்கள் இக்பால், டோனி, முகமது அலி, சங்கர், துணைச் செயலாளர்கள் சரவணன் சிலம்பரசன், நாகராஜ், பழனிவேல், அருள்ராஜ், கமிட்டி உறுப்பினர்கள் சாமிநாதன், ராஜசேகரன், ராஜதுரை, வேம்பன், ராமராஜன் உட்பட வியாபாரிகள் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சண்டே மார்க்கெட் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சண்டே மார்க்கெட் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லாத வகையில் பேரிகார்ட் அமைக்க வேண்டும். சண்டே மார்க்கெட் பகுதியில் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை புதுச்சேரி நகராட்சி சார்பில் அமைத்துக் கொடுத்திட வேண்டும். என்பன போன்ற தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.