கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம்
தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து வருகிறது அதன் அடுத்த கட்டமாக பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டியுடன் இணைந்து கோயில்களில் நட்சத்திர மரங்களை நடும் நிகழ்வுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் தொடக்க விழா
காரைக்கால் அருகில் சரண்யாபுரம் கிராமத்தில் அருள்பாளிக்கும் அருள்மிகு ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவிளை சுற்றி 27 – நட்சத்திர மரங்கள் நடப்பட்டது. Rain – மழைத்துளி உயிர் துளி நிறுவனர் திரு.வீரராகவன், நிர்வாகிகள் விக்னேஷ், முருகேசன், லட்சுமி நாரயணன், வெங்கட் , ராஜ்மோகன் இவர்களுடன் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி தன்னார்வலர்கள் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் தலைமையில் மனிஷ், லெனின், சரோஜா சாரி டெபுள் டிரஸ்ட் ஸ்டீபன் ராயப்பா. சமுகன் சரவணன், சிவ.அன்பு திருமதி சவிதா ஆகியோர் பங்கு பெற்று மரங்களின் நட்டனர் இந்த திட்டமானது புதுவையில் தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் அரசு மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் செயல்படுத்த உள்ளோம்.
இப்படிக்கு தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி பூரணாங்குப்பம், புதுச்சேரி