கொடைக்கானல் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் எங்கும் இல்லா மலையில் தேரோட்டம் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்களின் கோலாகள காட்சி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் பழமை வாய்ந்த அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக் கோயில் உள்ளது
இந்த கோயிலானது பழனி அருள்மிகு தண்டபாணி திருக்கோவிலுக்கு சொந்தமானது.

இந்த திருக்கோவில் விவசாய மக்களின் ஊர் மத்தியில் மருத்துவ குணம் படைத்த வெள்ளைப் பூண்டு மணம் மணக்க,சுற்றிலும் வீடுகளின் நடுவில் உள்ள குழந்தை வேலப்பர் அருள் பாலிக்கும் இந்த காட்சி திருவிழா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருள்மிகு குழந்தை வேலப்பர் மயில் வாகனம்,அன்னபட்சி வாகனம்,கிடா வாகனம்,சேவல் வாகனம்,சிங்க வாகனம்,பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான திங்கட்கிழமை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து குழந்தை வேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தேரின் முன் பகுதியில் ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்ட நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும், உடைந்த தேங்காயின் மேல் தரையில் உருண்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இந் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் திருப்பூர்,ஈரோட்டைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் கொடைக்கானல் பூம்பாறை குழுவினர் இணைந்து ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர். நீர் மோர் பந்தல் ஆகியவும் இடம்பெற்றது. குறிப்பிடத்தக்கது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி அருள்மிகு தண்டபானி திருக்கோவிலைச் சேர்ந்த அறங்காவலர்கள் மற்றும் பூம்பாறை கோயில் விழாக் குழுவினர்,பொது மக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர் மேலும் இந்த தேரோட்டத்தின் போது அரோகரா அரோகரா என முழங்க குழந்தை வேலப்பர் தங்க ரதத்தில் விதி உலா வருவது அனைவரும் கண்களுக்கு விருந்தாகியது மேலும் அறுபடை வீடுகளான பழனியில் கூட பக்தர்களுக்கு இந்த பாக்கியம் கிடைப்பதில்லை ஆனால் கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோவிலில் இந்த பாக்கியம் அனைவருக்கும் உள்ளது என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கொடைக்கானல்,பூம்பாறை,மண்ணவனூர்,கூக்கால், குண்டுபட்டி,பூண்டி, கிளாவரை,போலூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர் மேலும் கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் காவல் ஆய்வாளர் பாஸ்கர் முன்னிலையில் காவல்துறை பலத்த ஏற்பாட்டுடன் பொதுமக்களை பாதுகாத்தது அனைவரும் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் ஞாயிறு திருவிழா நிறைவு பெறுகிறது.

Share this to your Friends