பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு
ஸ்ரீ அங்காளம்மன் ஆலய பால்குட திருவிழா ….

திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் …..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் கோவில் குளக்கரையில் இருந்து மேள தாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
விழாவின் ஏற்பாடுகளை அங்காளம்மன் கோவில் செயல் அலுவலர் க.ராமச்சந்திரன், அறங்காவலர் என்.ராஜேந்திரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

Share this to your Friends