சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி உற்சவம் கொடியேற்றம். காவடிகள் எடுத்து பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் ராஜராஜேஸ்வரி எனும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு 26-ம் தேதி சிவராத்திரி விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்று கோயிலில் கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. முன்னதாக சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் அலகு காவடிகள், பறவை காவடிகள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கோவிலில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Share this to your Friends