பாபநாசம் அருகே ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டுற்றியெட்டு சங்காபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வைரவன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி பெருவிழாவை முன்னிட்டு நூற்றியெட்டு வலம்புரி சங்காபிஷேகம், கலச அபிஷேகம், பைரவர் மூல மந்திரம், யாக பூஜைகள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க காலபைரவருக்கு சங்காபிஷேகம், தேனாபிஷேகம், பாலாபிஷேகம், சந்தனம், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Share this to your Friends