புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறை துணைத் தலைவர் திரு.இரா.சத்திய சுந்தரம் அவர்கள் மாலை அணிவித்தார்….
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இம்மாத நிகழ்வில் காவல்துறை துணைத் தலைவர் திரு.இரா.சத்திய சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து தமிழ்ச்சங்க பொன்விழா மலரினை நினைவு பரிசாக வழங்கினார்.உடன் செயலர் சீனு.மோகன்தாசு,பொருளர் மு.அருள்செல்வம்,துணைத்தலைவர் ப.திருநாவுக்கரசு,ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி அ.உசேன்,கலைமாமணி எம்.எஸ்.இராசா, அ. சிவேந்திரன்,கவிஞர் இர.ஆனந்தராசன்,முனைவர் அருள்ராஜ்,இளங்கோவன்,கவிஞர் குமரவேல்,பரசுராமன் ஆகியோர் உள்ளனர்.நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் காவல்துறை துணைத் தலைவர் திரு.இரா.சத்திய சுந்தரம் அவர்கள் திருக்குறள் புத்தகம் வழங்கினார்.