புதுச்சேரி

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு நாடார் பேரவையில் உறுப்பினராக உள்ள வி.கார்த்திக் . அவரது பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கடை குடோன் பெரம்பை அருகே உள்ள கோபாலன் கடை பகுதியில் இயங்கி வந்தது.

திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகின. இதனால் அவர் லட்ச கணக்கில் நஷ்டம் அடைந்தார். இதனால் அவருக்கு நமது பேரவை சார்பில் ரூபாய் 20,000 உதவித்தொகையாக இன்று நேரில் சென்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர் R. குமார் நாடார் அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் K.K .சாமி, பொருளாளர் E k ராஜா, கௌரவ ஆலோசகர் , P. கள்ளங்கொண்டான் மாநிலத் துணைத் தலைவர் P.M.காமராஜ்,இளைஞர் அணியின் K.கிருபா மற்றும் K.சதீஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த தொகை வழங்கப்பட்டது. தொகையை பெற்றுக் கொண்ட கடை உரிமையாளர் கார்த்திக் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

Share this to your Friends