தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கைலாசநாதர் மலைக்கோயிலில் ஹோமமும் யாகமும் நடத்தி பூஜைகளும் செய்து விமான பாலாலயம் சிறப்பாக நடைபெற்று தீபாராதனைகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் தனலட்சுமி, சபதி ஜெயராம் மற்றும் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு சிறப்பு கௌரவ ஆலோசகர் வி.ப.ஜெயபிரதீப், தலைவர் கு.நாராயணன், செயலாளர் க.சிவகுமார், பொருளாளர் விஜயராணி மற்றும் அன்பர் பணி செய்யும் குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகள் செய்தனர் . வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Share this to your Friends