மல்டி கலர்ல சிறப்பு மலர் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது…
அதற்காக நிதி ஆதாரம் திரட்ட வேண்டும் என்பதற்காகவும் வாழ்த்துக்கள் /விளம்பரங்கள் கேட்டு அறிக்கையும்,கோரிக்கையும் பலமுறை வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்பார்த்து அளவு அல்லது குறைந்த பட்ச அளவிலான விளம்பரங்கள் கூட வந்து சேரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்றுதான். நான் நினையாத ஒன்று அல்ல…
கடந்த காலங்களில் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு இந்த சிரமங்களை எல்லாம் சந்தித்து இருக்கிறேன்.அதாவது ஒரு மலர் என்று சொன்னால் அதில் வணிக ரீதியான விளம்பரங்கள் தான் நிதி ஆதாரத்திற்கு பெரிதும் உதவி செய்யும். எல்லோரும் அதைத்தான் கடைப்பிடிப்பார்கள். ஆனால் நான் வணிக ரீதியான விளம்பரங்கள் தமிழ்ச் சங்க மலரில் இருப்பது பொருத்தமாக இராது என்று கடந்த காலங்களிலும் முடிவெடுத்து மலர் வெளியிட்டு சிரமங்களைச் சந்தித்து இருக்கிறேன்… இப்போதும் இந்த மலர் வெளியிடுவதற்கு வணிக ரீதியான விளம்பரங்களை தவிர்த்து தமிழ்/ இலக்கிய அமைப்புகளின் விளம்பரங்கள்/ வாழ்த்துக்கள் அல்லது தமிழ் ஆளுமைகளின் விளம்பரங்கள் அவர்களுடைய வாழ்த்துகளைப் பெற்று மலர் வெளியிடுகின்ற அந்தப் பணியை தொடங்கி இருக்கிறேன்.
பின்னடைவு என்பது இருந்தாலும் பொதிகைத் தமிழ்ச் சங்க 10-ஆவது ஆண்டு விழா மலர் சிறப்பாக வெளிவர இன்னும் தமிழ் அமைப்புகள் மற்றும் ஆளுமைகளை விரும்பி கேட்டுக்கொள்கிறேன். விளம்பரத்திற்கான அல்லது வாழ்த்துகளுக்கான தொகையோடு உங்கள் பங்களிப்பினையும் தந்து தமிழ்ப் பணிகளுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கவிஞர் பேரா, திருநெல்வேலி.