சின்னமனூர் நகரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் சின்னமனூர் வ உ சி சிலை அருகில் உனக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் மத்திய பாஜக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் பி. இராஜபாண்டியன் தலைமை வகித்தார் பாஜக நகர தலைவர் சிங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்
மாநில மகளிர் அணித் தலைவி உமாரதி ராஜன் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் சோழன் பழனிச்சாமி சின்னமனூர் நகர முன்னாள் தலைவர் இ. லோகேந்திரராஜன் ஆகியோர் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து சிறப்புரையாற்றினார்கள்
இந்த கூட்டத்தில் போடி நகரத்தலைவரும் நகர் மன்ற உறுப்பினருமான சித்ராதேவி தண்டபாணி நகர் மன்ற உறுப்பினர் எஸ் மணிகண்டன் கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆர்.பிரதீபா ரெங்க பாபு உள்பட பாஜக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னாள் பாஜக நகரத் தலைவர் இ. லோகேந்திரராஜன் நன்றி கூறினார்.