தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி. வருகையை கண்டித்து போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்துக்களின் புனித மலையான அறுபடை வீடுகளில் ஒன்றான
திருப்பரங்குன்றத்திற்கு ஆய்வு பணிக்காக மப்பு வாரியத் தலைவர் நவாஸ்கனி சென்ற பொழுது சர்ச்சை ஏற்பட்டது இதனால்
நவாஸ்கனி எம்.பி.யின் கடையநல்லூர் வருகையை கண்டித்து கடையநல்லூரில் இந்து முன்னணியினரும், பாஜகவினரும் இணைந்து இந்து முன்னணி சிவா தலைமையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நகர செயலாளர் திருப்பதி சீனிவாசன், நகரத் துணை தலைவர் கண்ணன், பாஜக நகர தலைவர் சுப்பிரமணியன், மாரி, கவுன்சிலர் சங்கரநாராயணன், முருகன், ஐடி விங் காளிமுத்து, கார்த்திக்,ஓபிசி அணி கண்ணன், இளைஞர் அணி விவேக், நகர துணை தலைவர் காளிராஜ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, கந்தசாமி, மத்திய அரசு பிரிவு பாலசுப்பிரமணியன், முத்துமாரியப்பன், ஒன்றிய பொதுச்செயலாளர்
செல்வராஜ், இந்து ஆட்டோ முன்னணி காளிராஜ், சூரியா உள்ளிட்ட 16 பேரை சங்கரன்கோவில் டிஎஸ்பி அறிவழகன் இன்ஸ்பெக்டர் ஆடிவெல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.