திருவெற்றியூர். ஏப். 25
வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்தும் புதிய வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் மாவட்டத் தலைவர் ரகு தலைமையில் திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு கண்டன முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம். எஸ். திரவியம் முன்னிலை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். சுகுமாரன் வரவேற்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தின் போது கேஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு பட்டை நாமம் சாத்தி வைத்து இருந்தனர் ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் டாக்டர் விஜயன், அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில செயலாளர் கமாலிகா காமராஜ், நிர்வாகிகள் விமல்தாஸ்,கே. ஆர். சிவக்குமார்,டி. வி. முருகன், நாகராஜ் கலையரசன், லோகு உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்,
முன்னதாக காஷ்மீரில் திவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். முடிவில் திருவொற்றியூர் தொகுதி தலைவர் அசோக் குமார் நன்றி கூறினார்.