தென்காசி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்
நிர்வாக குழு கூட்டம் தென்காசி மவுண்ட் ரோடு செய்யது அப்துர் ரஹ்மான் பாஃபகி தங்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் எம்.அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் இறைமறை வசனம் ஓதினார்.
மாநிலச் செயலாளர் நெல்லை மஜீத், மாநிலத் துணைத் தலைவர் விடிஎஸ்ஆர்.முகம்மது இஸ்மாயில், மாணவர் அணி தேசிய துணை தலைவர் முஹம்மது அல் அமீன், விவசாய அணி மாநில செயலாளர் முகம்மது அலி, மாநில பொதுச் செயலாளர் ஹபிபுல்லா, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜாகிர் அப்பாஸ், தொழிலாளர் அணி மாநில துணை தலைவர் மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராகிம், மாவட்ட துணைத் தலைவர் முகமது முஸ்தபா, மாவட்ட துணைச் செயலாளர் ஹைதர் அலி, கடையநல்லூர் நகர தலைவர் நல்லாசிரியர் சையது மசூது, செயலாளர் ஆசிரியர் முஸ்தபா, பொருளாளர் ஜபருல்லா, தென்காசி நகர தலைவர் அபூபக்கர் புளியங்குடி நகர தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் ஷேக் காதர், மைதீன், வாசுதேவநல்லூர் நகர தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் செய்யது,
மாவட்ட இளைஞரணி தலைவர் சையது அபுதாஹிர் மாவட்ட மாணவர் அணி தலைவர் ரிபாய் மாவட்ட வர்த்தக அணி தலைவர் அகமது மீரான் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் இஸ்மாயில் மாவட்ட மகளிர் அணி தலைவர் சையத் அலி பாத்திமா மாவட்ட விவசாய அணி தலைவர் அப்துல் ரகுமான் மாவட்ட விவசாய அணி செயலாளர் அபுல் ஹசன் சாதலி உள்ளிட்ட மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொழிலாளர் அணி பொருளாளர் இஸ்மாயில் அனைவருக்கும் நன்றி கூறினார்.