திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை வந்துள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ. 11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலி பொறுப்பு அமைச்சர் கே என் நேரு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான ஆவுடையப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிட்டார்