கரூர் மாவட்ட கிருஷ்ணராயபுரத்தில் பள்ளி மாணவ, மணவியர்களுக்கு நோட்டுபுத்தகம் வழங்கினார் எம்எல்ஏ..
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி
கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவியர்களுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு மற்றும் நோட்டு,புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கட்டளை ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக தலைவர் சேதுமணி மகாலிங்கம் மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் அம்பிகாபதி மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள்,
வார்டு கவுன்சிலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.