சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் இந்து அறநிலையை துறைக்கு சொந்தமான ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களின் முதன்மையான கோயிலாகும் திகழ்கிறது.இன்று அம்மாவாசையை முன்னிட்டு தீர்த்தக் கரையில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது , இந்நிகழ்வின் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும் திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர்.

Share this to your Friends