புதுச்சேரி அரசு, போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா கம்பன் கவியரங்கத்தில் இன்று நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டனர்.

சாலைப் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.மேலும், சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்திய காவலர்கள், வழிப்புணர்வு எற்படுத்திய நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் – மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டம் சம்பந்தமான வீடியோக்களை பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்தார்.

சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்றத்தில் மாநில அளவில் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி பள்ளி சார்ந்த மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்து பரிசினை தட்டிச் சென்றார்.

விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அணிபால் கென்னடி, தலைமைச் செயலர் டாக்டர் சரத் சௌகான், அரசு செயலர்கள் மாதவ் ராவ் மோரே, ஜவஹர், முத்தம்மா, போக்குவரத்துத் துறை ஆணையர், சிவக்குமார், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, உள்ளிட்ட பள்ளி மாணவ-மாணவிகள் விழாவில் பங்கேற்றனர்.

Share this to your Friends