பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாவட்ட தலைவர் பி. ராஜபாண்டியன் தலைமையில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்
இதில் பைசரன் புல்வெளியில் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க வந்த அப்பாவி பயணியர் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த தாக்குதலில் முஸ்லிம் அல்லாதோ ரை குறிவைத்து குறிப்பாக இந்துக்களா என்பதை கேட்டு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விலைமதிப்பற்ற மனித உயிரை பறித்த பயங்கரவாதிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தீவிரவாத்தை கண்டித்தும் இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத கும்பல்களை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் தீவிரவாதத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிகழ்ச்சியில் சின்னமனூர் பாஜக நகர தலைவர் சிங்கம் முன்னாள் நகரத் தலைவர் இ. யோகேந்திர ராஜன் போடிநாயக்கனூர் நகரத் தலைவர் சித்ராதேவி தண்டபாணி போடி நகராட்சி நகர்மன்ற கவுன்சிலர் மணிகண்டன் உள்பட பாஜக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.